Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகையாகும். தமிழ் மாதமான தை மாதம் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு, குறிப்பாக சூரியன், மழை, மண், மாடுகள் ஆகியவற்றிற்கு நன்றி கூறும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. தை மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் 4 நாட்கள் இந்த பொங்கல் விழா நடைபெறும். முதல் நாளான போகி, பழையவற்றை அகற்றி, புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக இருக்கிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம். அடுத்த நாள்தான் பெரும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி செலுத்தி, புதுப்பானையில் பொங்கல் சமைக்கும் முக்கிய நாளாகும். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் உதவும் மாடுகளை போற்றி வழிபடும் நாளாக உள்ளது. கடைசி பொங்கலானது, காணும் பொங்கலாகும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழும் நாளாக கொண்டாடப்படும்.

Read More

2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

Jallikattu Safety Guidelines: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொங்கலுக்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?.. விவசாயிகளுடன் கொண்டாட திட்டம்!!

கடந்த 2024ம் ஆண்டில் டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை மீனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு

Pongal Gift : புதுச்சேரியில் ஒவ்வொரு ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் ரேசன் கடை இல்லாத மாநிலம் புதுச்சேரி என விஜய் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது சர்ச்சையயை ஏற்படுத்தியிருக்கிறது.

நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்

Karuppu Movie : நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகும் படம் கருப்பு என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் தற்போது படக்குழு மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.