Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..

Traffic Diversion: காணும் பொங்கல் நாளில், பொதுமக்கள் மாட்டுப் பொங்கலை முடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். குறிப்பாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், காணும் பொங்கல் முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Jan 2026 06:53 AM IST

சென்னை, ஜனவரி 17, 2025: பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17 தேதியான இன்று காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். இதற்காக, சென்னையில் மட்டும் 16 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காணும் பொங்கல் நாளில், பொதுமக்கள் மாட்டுப் பொங்கலை முடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். குறிப்பாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள்.

காணும் பொங்கல் – சென்னையில் போக்குவரத்து மாற்றம்:

இந்த நிலையில், காணும் பொங்கல் முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 17.01.2026 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு, சென்னையில் அனைத்து சாலைகளிலும், குறிப்பாக காமராஜர் சாலையில், பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, காலை 11.00 மணி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன:

  1. பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்லச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு, வாலாஜா முனை – அண்ணா சாலை – அண்ணா சிலை – ஸ்பென்சர் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். (சென்னை மாநகர பேருந்துகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)

  2. போர் நினைவுச் சின்னத்திலிருந்து கடற்கரை நோக்கி வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும் போது, ஆடம்ஸ் சந்திப்பிலிருந்து சுவாமி சிவானந்தா சாலை நோக்கி வாகனங்களை நிறுத்துவதற்காகத் திருப்பிவிடப்படும்.

  3. உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலான சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். சென்னை மாநகர பேருந்துகள் உழைப்பாளர் சிலை நோக்கி வலதுபுறமாகத் திரும்பி வாலாஜா சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

  4. உழைப்பாளர் சிலை நோக்கிச் செல்லும் சென்னை மாநகர பேருந்துகள், கண்ணகி சிலை சந்திப்பிலிருந்து பாரதி சாலை – பெல்ஸ் சாலை – வாலாஜா சாலை – அண்ணா சிலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பிவிடப்படும்.

  5. காந்தி சிலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி வரும் வாகனங்கள் (சென்னை மாநகர பேருந்துகளைத் தவிர) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ஆர்.கே. சாலை – மியூசிக் அகாடமி சந்திப்பு – டி.டி.கே. சாலை – ஜி.ஆர்.எச். முனை – மணிக்கூண்டு – ஜி.பி. சாலை – அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பிவிடப்படும்.

  6. விக்டோரியா ஹாஸ்டல் சாலை மற்றும் பெல்ஸ் சாலை ஆகியவை, பாரதி சாலை சந்திப்பிலிருந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். வாலாஜா சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

  7. பாரதி சாலையில் கண்ணகி சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ரத்னா கஃபே சந்திப்பிலிருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை – வாலாஜா சாலை – அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பிவிடப்படும்.

  8. பெரியார் சிலை சந்திப்பில், கடற்கரைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே சுவாமி சிவானந்தா சாலை நோக்கி அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் அண்ணா சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பில் திருப்பிவிடப்படும்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை.. இனி மழை இருக்காது – வானிலை சொல்வது என்ன?

 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்:

  1. ஃபோர்ஷோர் சாலை (பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும்)

  2. சென்னை பல்கலைக்கழகம்

  3. சுவாமி சிவானந்தா சாலை

  4. எம்.ஆர்.டி.எஸ். சேப்பாக்கம்

  5. லேடி வெலிங்டன் பள்ளி

  6. இராணி மேரி மகளிர் கல்லூரி

  7. சீனிவாசபுரம் லூப் சாலை (பேருந்துகள் மட்டும்)

  8. பொதுப்பணி துறை மைதானம்

  9. செயின்ட் பீட்ஸ் மைதானம்

  10. அன்னை சத்யா நகர்

  11. ஈ.வி.ஆர். சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம்

  12. மாநிலக் கல்லூரி

வாகன ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.