AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்

Toxic Gas Leak in Ranipet: ராணிப்பேட்டை அருகே ‘ராணி டெக்’ கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அடைப்பை நீக்க முயன்றபோது ஏழுமலை முதலில் மயங்கிய நிலையில் விழுந்தார்; அவரை காப்பாற்ற சென்ற மற்ற மூவரும் பாதிக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்
கோப்புப்படம் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Mar 2026 10:25 AM IST

ராணிப்பேட்டை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் நான்கு தொழிலாளர்கள் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ‘ராணி டெக்’ சுத்திகரிப்பு ஆலையில் நடைபெற்றது. 92 தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் இங்கு சுத்திகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கம்

ராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சொந்தமான கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூரில் ‘ராணி டெக்’ எனும் தனியார் தோல் தொழிற்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் ராணிப்பேட்டை, மாந்தாங்கல், சீனிவாச பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 92 தோல் தொழிற்சாலை மற்றும் டேனரிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பைப்-லைன் மூலம் கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

Also Read: திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!

அடைப்பு நீக்க முயன்றபோது விபத்து

இந்த நிலையில், வி.சி.மோட்டூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்ய ஏழுமலை, ரமேஷ், சாந்தகுமார், கிட்டு ஆகிய 4 பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் முதலில் ஏழுமலை மயங்கி தொட்டிக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற மூன்று பேரும் ஒருவருக்கொருவர் உள்ளே சென்றபோது, அவர்கள் மீதும் விஷவாயு தாக்கி மயக்கம் ஏற்பட்டது.

மீட்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நால்வரையும் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us