AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா?.. இந்த திட்டங்களை கொஞ்சம் செக் பண்ணுங்க!

Investment Schemes For Children Future | ஒவ்வொருவரும் நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. நிதி பாதுகாப்பு இல்லை என்றால் எதிர்பாராத பொருளாதார சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா?.. இந்த திட்டங்களை கொஞ்சம் செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Aug 2026 22:13 PM IST

சம்பாதிக்கும் பணத்தை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்றாலும், நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்தை பெற வேண்டும் என்றாலும் சேமிப்பு அல்லது முதலீடு செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது சிக்கலற்ற பொருளாதாரத்தை பெற உதவும். இந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் முதலீட்டு திட்டக்கள்

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் சில முதலீட்டு திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா திட்டம்

இந்த என்பிஎஸ் வாத்சல்யா (NPS Vatsalya) குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு அசத்தலான திட்டம். குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, நீண்ட  கால நிதியை உருவாக்க உதவும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தில் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குழந்தைகள் 18 வயதை நிறைவடைந்த பிறகு அவர்களின் பெயர்களில் கணக்கை மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 80CCD-ன் கீழ் ரூ.50,000 வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : EPFO : பணி இழந்துவிட்டால் எவ்வளவு பிஎஃப் பணம் எடுக்கலாம்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுத்தும் அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana). இந்த திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயர்களில் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்யலாம். அதுவே அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க : மிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்ப்பார்ப்பு

இந்த திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். பெண் குழந்தைகள் 21 வயதை நிறைவடையும்போது இந்த திட்டத்தில் இருந்து முழு பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

Follow Us