AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் வாங்க சரியான நேரம்? தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு..

ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொருத்தவரையில், ஒரு கிராம் ரூ.14,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம்? தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Aug 2026 11:28 AM IST

ஆகஸ்ட் 4, 2026: தங்கம் விலை நேற்றைய தினம் சற்று உயர்வை சந்தித்த நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கு முன்பு ஒரு கிராம் தங்கம் ரூ.16,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.13,200 ஆக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தைப் பொருத்தவரையில், ஒரு கிராம் ரூ.14,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளன.. இதனை செய்யவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

வெள்ளி விலையைப் பொருத்தவரையில், கடந்த ஒரு வாரமாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம், ஈரான் தொடர்பான போர் சூழல் உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திலிருந்து ஓரளவு விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?

மேலும், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலை மந்தநிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் சீரான போக்கில் இருந்து வருவதால், வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow Us