இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான திமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆகஸ்ட் 4, 2026: தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவிலும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்தச் சூழலில், தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதிரடியாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்:
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் போலீசார் சென்னைக்கு வந்து, நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதைத்தான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதலமைச்சருக்கு ‘ரீல்ஸ்’ வெறி முற்றிப்போயுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!
கைது நடவடிக்கை – சட்ட ரீதியாக சந்திப்பேன் – உதயநிதி:
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ‘ரீல்ஸ்’ வெறியில் உள்ளனர். நான் பேசாத ஒன்றை பேசியதாக ‘காப்பி-பேஸ்ட்’ செய்து பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நான் மட்டுமல்ல, கடைக்கோடி திமுக தொண்டன்கூட பயப்பட மாட்டான். காவிரி பிரச்சினையை திசைதிருப்பவே என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: உதயநிதி ஸ்டாலின் கைது.. பரபரப்பில் சென்னை
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான திமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதனால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை மேல்நடவடிக்கைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.