AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லாவா விராட் கர்வ் 5ஜி.. அறிமுக விலை ரூ.19,999 மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Lava Introduced Lava Virat Curve 5G Smartphone In India | லாவா நிறுவனம் தொடர்ந்து தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

லாவா விராட் கர்வ் 5ஜி.. அறிமுக விலை ரூ.19,999 மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
லாவா விராட் கர்வ் 5ஜி அறிமுகம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Sep 2026 20:00 PM IST

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை (Smartphone) அறிமுகம் செய்யும் நிறுவனமாக லாவா (Lava) உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் லாவா ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிறுவனம் கடந்த மாதம் தனது லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனை (Lava Virat V1 Smartphone) 4ஜி மற்றும் 5ஜியில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தான் தற்போது லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Virat Curve 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், லாவாவின் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

லாவாவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+3D Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7100 மீடியாடெக் டைமன்சிட்டி பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி LPDDR5 RAM கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் Sony IMX752 ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் Night Mode, Pro Video, Dual View Video, Motion Photo, Sports Mode ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!

லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் 6,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், இது 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு அறிமுகம் விலையான இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.19,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 28, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us