வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?
WhatsApp Safety Features | வாட்ஸ்அப் செயலியில் பல விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.
இந்திய பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக வாட்ஸ்அப் (WhatsApp) மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பணிக்கு செல்லும் நபர்கள் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதுதவிர, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் உரையாடுவதற்கும் வாட்ஸ்அப் மிக முக்கியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் பல வகையான மோசடிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்கேம்களில் (WhatsApp Scam) இருந்து உங்களை பாதுகாக்க உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Silence Unknown Calls
இந்த “Silence Unknown Calls” அம்சம், உங்களது தொடர்பு பட்டியலில் இல்லாத, மோசடி எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை ஸ்பேம் என காட்டும். இதனை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கலாம்.
Context Cards
“Context Card” அம்சம் உங்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்கும். அதாவது, உங்களுக்கு ஒரு புதிய எண்ணின் இருந்து அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வருகிறது என்றால் நீங்கள் இருவரும் ஒரே குழுவில் உள்ளீர்களா, அந்த வாட்ஸ்அப் கணக்கு புதியதாக உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் தோன்றும்.




இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் பரிசாக வழங்க சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ்.. boAt தரும் மாடல்கள்!
Screenshare Warning
மோசடிக்காரர்கள் சில சமயம் ஸ்கிரீன் ஷேர் செய்யக்கூறி அதன் மூலம் தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவர். இந்த நிலையில் தான், புதிய மற்றும் சந்தேகத்திற்கு உரிய எண்களுக்கு ஸ்கிரீன் ஷேர் செய்யும்போது அது குறித்து வாட்ஸ்அப் எச்சரிக்கை செய்யும்.
Device Linking Alerts
மோசடிக்காரர்கள் சில சமயம் வேறு சில செயலிகளில் வாட்ஸ்அப் கணக்கை லாக் இன் செய்ய வைத்து மோசடியில் ஈடுபடுவர். இந்த நிலையில் தான், சந்தேகத்திற்கு உரிய வாட்ஸ்அப் லிங் கோரிக்கைகள் வந்தால் அது குறித்து இந்த அம்சம் எச்சரிக்கை செய்யும்.
இதையும் படிங்க : Android பயனர்களுக்கு CERT வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அம்சங்களை செய்து வைத்துக்கொள்ளும் பட்சத்தில் வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.