AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Android பயனர்களுக்கு CERT வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?

CERT Gave Important Warning For Android Users | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இந்தா நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை CERT வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Android பயனர்களுக்கு CERT வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Sep 2026 19:50 PM IST

இந்தியாவில் ஏராளமான மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, Indian Computer Emergency Response Team இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அவர்களது ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

CERT எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

CERT வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைப்பாடுகள் கண்டறிப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எந்த எந்த வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் இந்த சிக்கல் உள்ளது?

  1. ஆண்ட்ராய்டு 14
  2. ஆண்ட்ராய்டு 15
  3. ஆண்ட்ராய்டு 16
  4. ஆண்ட்ராய்டு 16 QPR2
  5. ஆண்ட்ராய்டு 17

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தானாகவே இயங்கும் செயற்கை நுண்ணறிவு: உலக நாடுகளுக்கு ஆபத்தா?

ஆண்ட்ராய்டு பயனர்கள் கவலைக்கொள்ள வேண்டியது ஏன்?

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய செயலியாக ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கின்றனர். இவ்வாறு முக்கிய தகவல்களை சேகரித்து வைக்கும் பட்சத்தில் அவை திருடப்பட்டு அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஆப்பிள் செய்த புதிய சாதனை.. ஆப்பிள் டுயோ எவ்வளவு?.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்!

பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இத்தகைய எச்சரிக்கை வந்திருந்தாலும், மகிழ்ச்சி அடைய கூடிய தகவல் ஒன்றும் உள்ளது. அதாவது, பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஸ்மார்ட்போன்களுக்கான பாதுகாப்பு அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. எனவே, தங்களது ஸ்மார்ட்போனை பாதுகாக்க விரும்பும் பயனர்கள், தங்களது ஸ்மார்ட்போனுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Update) உள்ளதா என்பதை சோதனை செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us