மின்சார துறையில் வரும் முக்கிய மாற்றம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..
CM Joseph Vijay London Visit: லண்டனில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், லண்டனில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரூ. 11,000 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து:
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions)… pic.twitter.com/rUuL2ZB1lY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 14, 2026
இதனைத் தொடர்ந்து, லண்டனில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா சிறப்பு பதக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு..
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., ஆகியோரும் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..
தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இந்த முதலீடு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.