மழைக்கு ரெடியா மக்களே..! செப்டம்பர் 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?
Weather Report: சென்னையை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14, 2026: தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:
செப்டம்பர் 15ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் முழுவதுமே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 16ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி வரை தொடரும் மழை:
செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, தஞ்சாவூர், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என்பதன் காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகத்தின் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆபாச பேச்சு தான் DMK-வின் DNA.. மு.க.ஸ்டாலின் & உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்!
செப்டம்பர் 19ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய வட தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், உள் தமிழகத்தில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை நேரங்களில் தொடரும் மழை:
சென்னையை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.