வங்கி Vs ஃபோஸ்ட் ஆபீஸ்.. எதில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்தது.. இப்படி தெரிந்துக்கொள்ளுங்கள்!
Post Office Vs Bank Schemes For Investment | அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் வங்கி மற்றும் அஞ்சலகம் இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான் அதனை பல மடங்காக அதிகரிக்க முடியும். இவ்வாறு, சம்பாதிக்கும் பணத்தை பல மடங்காக உயர்த்தவில்லை என்றால், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே தான் பலரும் சிறிய தொகை என்றாலும் கூட சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய குழப்பம் தான் எதில் முதலீடு செய்வது என்பது. அதாவது, அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் எது சிறந்தது என தேர்வு செய்வது.
நிலையான வைப்பு நிதி திட்ட முதலீடு
நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்கள், தாங்கள் ஏற்கனவே கணக்கு வைத்துள்ள வங்கியையோ அல்லது தாங்கள் பயன்படுத்திய வங்கியையோ தான் தேர்வு செய்கின்றனர். ஆனால், நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய வெறும் வட்டி விகிதத்தை மட்டும் பார்ப்பது முறையானதா என்ற கேள்வி உள்ளது. எனவே தான், நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
இதையும் படிங்க : இனி காய்கறி வாங்குவதை கூட ஏஐ பார்த்துக்கொள்ளும்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்.. NPCI புதிய நடவடிக்கை!




6.90 சதவீதம் வட்டி வழங்கும் அஞ்சலகம்
செப்டம்பர் 30, 2026 வரையிலான காலாண்டு நிலவரப்படி, ஒரு ஆண்டுக்கான அஞ்சலக டெபாசிட் திட்டத்திற்கு 6.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதுவே எஸ்பிஐ வங்கி ரூ.3 கோடி வரையிலான ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதுவே, மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : இனி ஏடிஎம் கார்டுகளை, ஏடிஎம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.. வருகிறது அசத்தல் அம்சம்!
அதன்படி எஸ்பிஐ வங்கியை விடவும் அஞ்சலகம் பொது குடிமக்களுக்கு 0,65 சதவீதம் வட்டி கூடுதலாகவும், மூத்த குடிமக்களுக்கு 0.15 சதவீதம் கூடுதலாகவும் வட்டி வழங்குகிறது. அஞ்சலக திட்டம் எஸ்பிஐ வங்கியின் திட்டத்தை விடவும் அதிக வட்டி கொண்டு இருந்தாலும், அதனை எளிதாக எடுக்க நினைக்கும் நபர்களுக்கு வங்கி சிறந்த தேர்வாக இருக்கும். எனவே எந்த திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்னதாக அதன் சாதக, பாதகங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.