AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : வாரத்தின் கடைசி நாளில் தங்கம் விலை உயர்ந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai On September 12, 2026 | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : வாரத்தின் கடைசி நாளில் தங்கம் விலை உயர்ந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Sep 2026 11:41 AM IST

சென்னை, செப்டம்பர் 12 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 11, 2026) கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை, இன்று (செப்டம்பர் 12, 2026) உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் மோதல், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தப்போவதில்லை என முடிவு செய்துள்ளது உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 11, 2026) கடும் சரிவை சந்தித்த தங்கம், இன்று (செப்டம்பர் 12, 2026) உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று (செப்டம்பர் 12, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.14,170-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,458-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : MIS திட்டம்.. முதலீடு செய்பவர் இறந்தால் யாருக்கு பணம் செல்லும்?.. விதிகள் கூறுவது என்ன?

Follow Us