EPFO : இனி On Time-ல் பிஎஃப் பணம் கைக்கு வரும்.. விதிகளை கடுமையாக்கிய இபிஎஃப்ஓ!
EPFO New Rules On PF Money Settlement | பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் ஊழியருக்கு உரிய நேரத்தில் பணம் சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) புதிய பிஎஃப் (PF – Provident Fund) சட்டத்தின் மூலம் பல்வேறு புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. பிஎஃப் பணத்தை விரைவாக எடுக்கவும், பிஎஃப் கணக்கு தொடர்பான சேவைகளை ஊழியர்கள் மிக விரைவாகவும், சிக்கல்கள் இன்றி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஊழியர்களுக்கு பயனளிக்கும் மிக முக்கிய விதி ஒன்று அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ அறிமுகம் செய்த புதிய சட்டங்கள்
புதியதாக அமலுக்கு இந்த சட்டங்களில் ஒன்றுதான் பிஎஃப் பணம் எடுப்பது, பென்ஷன் மற்றும் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 20 நாட்களுக்குள் முடித்து தர வேண்டும் என்பது. அவ்வாறு, ஊழியர்களின் கோரிக்கைகள் 20 நாட்களுக்கு முடித்துதரப்படவில்லை என்றால் அதற்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதாவது, பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர் இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பணம் வங்கி கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும். இந்த சிக்கலை தவிர்க்க தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar Card : இன்னும் 20 நாட்கள் தான் உள்ளது.. அதற்குள் உங்கள் பிள்ளைகளின் ஆதாரில் இதை செய்யுங்கள்.. பெற்றோர்களே கவனியுங்கள்!




சம்மந்தப்பட்ட அதிகாரியின் கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்படும்
அதாவது, உறுப்பினர் முறையான அனைத்து ஆவணங்களுடனும், கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தால் அதனை அடுத்த 20 நாட்களுக்குள்ளாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கும் மேலாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதிகாரிக்கும் அபராதம் விதிக்கப்படும். முறையான காரணங்கள் இன்றி கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிக்கு 12 ஆண்டுகளுக்கான வட்டி அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதம் அந்த சம்மந்தப்பட்ட அதிகாரியின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி காரணமின்றி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!
பணி ஓய்வு பெற்ற ஒருவர் தனக்கு உரிய நேரத்தில் பிஎஃப் பணம் கிடைக்கவில்லை என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து பிஎஃப் பணத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.