AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கேரளாவில் காலடி பதித்த தவெக!”.. பாலக்காட்டில் திறக்கப்பட்ட முதல் கட்சி அலுவலகம்!!

TVK Opens First Party Office in Kerala's Palakkad: கேரள மாநிலத்தில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் பாலக்காடு மாவட்டம் கடம்பாடி பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் உள்ள பெரும் ரசிகர் பட்டாளமும், தவெகவின் தொண்டு பணிகளும் இந்த நகர்வுக்கு அடித்தளமாக அமைந்துள்ள நிலையில், அம்மாநில அரசியலில் தவெகவின் பிரவேசம் பெரும் பரபரப்பையும் எதிர்பாரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“கேரளாவில் காலடி பதித்த தவெக!”.. பாலக்காட்டில் திறக்கப்பட்ட முதல் கட்சி அலுவலகம்!!
பாலக்காட்டில் தவெக அலுவலகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Sep 2026 13:07 PM IST

பாலக்காடு, செப்டம்பர் 13: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் தனது கட்சிப் பணிகளையும் கட்டமைப்பு விரிவாக்கங்களையும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தற்போது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தங்களது அரசியல் கணக்கைத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் தவெக காலடி எடுத்து வைக்கப் போவதாகவும், அங்கு கட்சியின் மாநிலத் தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே ஊகங்கள் பரவி வந்தன. இத்தகைய சூழலில், கேரளாவில் முதன்முறையாகத் தவெகவின் முதல் அதிகாரப்பூர்வ கட்சி அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!

களமிறங்க காத்திருக்கும் தொண்டர்கள்:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட கடம்பாடி பகுதியில் அமைந்துள்ள Melarcode பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட இடத்தில் இந்த புதிய தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டால், உடனடியாகத் தீவிர அரசியல் களப்பணிகளில் இறங்கத் தயாராக இருப்பதாக அங்கு திரண்ட தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு மிக பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் சூழலில், தவெக சார்பில் பல்வேறு நற்பணி மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் புதிய மூன்றாவது சக்தி:

வழக்கமாகக் கேரளா மாநில அரசியலைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐ.டி.எஃப் (UDF) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப்  ஆகிய இரு முக்கிய முனைகளுக்கு இடையிலேயே பிரதான அரசியல் போட்டி நிலவி வருகிறது. இத்தகைய இருதுருவ அரசியலுக்கு மத்தியில், மூன்றாவதாகத் தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தவெக நிர்வாகிகளும் உள்ளூர் அரசியல் பார்வையாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

தென்னிந்திய அரசியலில் தவெக பரிமாணம்:

பாலக்காட்டில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவின் பிற மாவட்டங்களுக்கும் கட்சியின் அமைப்பை விரிவாக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் வேகமாக இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய்யின் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியிருப்பது, தென்னிந்திய அரசியலில் தவெகவின் புதிய பரிமாணத்தைக் காட்டும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us