கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை – இயக்குநர் கணேஷ் கே பாபு
Director Ganesh K Babu | தமிழ் சினிமாவில் டாடா படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. இவர் தற்போது இயக்கி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கராத்தே பாபு. இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டாடா. நடிகர் கவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்களில் இந்த டாடா படம் அவரது சினிமா கெரியரில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்தே நடிகர் கவினின் சினிமா வாழ்க்கை தொடர்ந்து உயரத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டாடா படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த கணேஷ் கே பாபு அடுத்தடுத்து படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் இயக்குநர் கணேஷ் கே பாபு தற்போது எழுதி இயக்கி உள்ள படம் கராத்தே பாபு. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் கணேஷ் கே பாபு சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை:
அதன்படி இயக்குநர் கணேஷ் கே பாபு பேட்டி ஒன்றில் பேசியதாவது, கராத்தே பாபு கதை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. சட்டமன்றத்தில் அவர், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே… என்று பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அதற்கேற்ற ஒரு காட்சியை நான் குறிப்பாக எழுதியிருந்தேன்.
ஆனால் டாடா படத்திற்குப் பிறகு, ரவி மோகன் அவர்களிடம் ஒரு காதல்-நகைச்சுவை கதையைச் சொன்னேன். அவர் வேறு ஒரு புதிய யோசனையைக் கேட்டபோது, நான் கராத்தே பாபு கதையைப் பற்றிக் கூறினேன். அந்தக் கரு அவருக்கு உடனடியாகப் பிடித்துப்போனது, அதனால் அவருக்குப் பொருந்தும் வகையில் கதையை மாற்றியமைத்தேன்.
ரவி மோகனின் இளமையான தோற்றத்தை மனதில் கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை நான் சிறப்பாக வடிவமைத்தேன். ‘கராத்தே பாபு’ படத்திற்குப் பிறகு, ரவி மோகன் அனைவருக்குமான ஒரு நாயகனாகத் தெரிவார். தனது திரைப்பயணத்தில் இதுவரை அவர் இது போன்றதொரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director Ganesh K Babu in a recent interview:
“Karathey Babu was originally written with Superstar #Rajinikanth sir in mind. I had specifically written a scene imagining how it would feel if he said in the Assembly, ‘Maanbumigu Peravai Thalaivar Avargalae.’
But after DaDa, I… pic.twitter.com/y13VP9sRhh
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 10, 2026
Also Read… ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்த சென்சார் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்