AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவில் பிக்பாஸ் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!

Bigg Boss Host Salary Information | இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே அனைத்து மொழிகளிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் பெருகிறார்கள் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் பிக்பாஸ் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!
பிக்பாஸ் தொகுப்பாளர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Sep 2026 06:30 AM IST

இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் வெளியானது. பலதரப்பட்ட குணங்கள் உடைய மக்களை ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பு இல்லாமல் வைத்து அவர்களின் மனநிலை மற்றும் நடத்தை எப்படி இருக்கிறது என்று கேமரா மூலம் படம்பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இந்த நிகழ்ச்சியை அப்படியே இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர். இதில் திரையுலக பிரபலங்கள் மட்டும் இல்லாமல் சாதாரண மக்களும் கலந்துகொண்டு போட்டியில் விளையாடுகிறார்கள். இந்தியாவில் முதன்முதலாக இந்தி மொழியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடங்கி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி தற்போது பிக்பாஸ் இந்தி மொழியில் 20-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 10-வது சீசனும் மலையாள மொழியில் 09-வது சீசனும் கன்னட மொழியில் 13-வது சீசனும் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த 5 மொழிகளிலும் இந்த ஆண்டு ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு அனைத்து மொழிகளிலும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Bigg Boss: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!

இந்தியாவில் பிக்பாஸ் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் இவ்வளவா?

தொடர்ந்து இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர்களின் சம்மளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி இந்தி மொழியில் தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான் ஒரு சீசனுக்கு ரூபாய் 200 கோடி சம்பளமாக பெருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல தமிழ் மொழியில் நடிகர் விஜய் சேதுபதி 75 கோடி முதல் 80 கோடி வரையும், தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகர்ஜுனா 35 கோடியையும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் 30 கோடியையும் மற்றும் கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப் 20 கோடி ரூபாயும் சம்பளமாக பெருகிறார் என்று தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே… 16 ஆண்டுகளைக் கடந்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us