Malavika Mohanan: சர்தார் 2 படத்தில் அப்படிப்பட்ட காட்சி ஒன்று இருக்கு – மாளவிகா மோகனன் சொன்ன சீக்ரட்!
Malavika Mohanan On Sadar 2: தென்னிந்திய சினிமாவில் அதிரடி மற்றும் ரோமெண்டிக் நடிகையாக பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் சர்தார் 2 படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நேர்காணலில் பேசிய மாளவிகா மோகனன், சர்தார் 2 பட காட்சிகள் குறித்த ரகசியத்தை தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தனுஷ் (Dhanush) போன்ற பல்வேறு உச்ச நடிகர்களுடன் சினிமாவில் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பவர் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நாயகியாக நடித்திருக்கிறார். இறுதியாக பிரபாஸுக்கு ஜோடியாக தி ராஜா சாப் (The Raja Saab) திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தார். நடிகை மாளவிகா மோகனன் படங்களில் சண்டை காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் நடித்திருக்கும் புது ஆக்ஷன் திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் உருவான இப்படத்தில், நடிகர் கார்த்தியுடன் (Karthi) இணைந்து நடித்துள்ளார்.
இப்படம் சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை மாளவிகா மோகனன் அதில், சர்தார் 2 படத்தில் தான் நடித்திருக்கும் சர்ப்ரைஸ் காட்சிகள் பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அதனால்தான் தெலுங்கு கற்றுக்கொண்டேன் – கார்த்தி சொன்ன உண்மை!
சர்தார் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரகசியத்தை சொன்ன மாளவிகா மோகனன்:
அந்த பேட்டியில் மளவிகாவிடம், “கார்த்தி சார் உங்களை மோனிகா பெல்லூச்சியுடன் ஒப்பிட்டுப் பேசியதாகவும், உங்களுக்கு ரொமான்டிக் காட்சி இல்லை என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சை பரவி வருகிறது. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன் அதில், “ஆமாம், படப்பிடிப்பின் போது கார்த்தி சார் இதைப் பற்றிப் பேசினார். ஒரு விமான சண்டைக் காட்சி இருக்கிறது, அதில் நான் ஸ்கர்ட் அணிந்து சண்டைக் காட்சிகள் செய்வேன். அது மிகவும் அழகாக இருக்கும். அவர் அதைப் பற்றிக் குறிப்பிட்டார். சூர்யா சார் மற்றும் கார்த்தி சார் இருவருமே பண்பானவர்கள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது – நடிகர் சூரி
சர்தார் 2 திரைப்படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த எக்ஸ் பதிவு:
A little retro, a little dangerous 🎞️🖤
Zara🖤See you in theatres in 2 days ❤️🔥#Sardar2 💥 pic.twitter.com/lb5UXDCX1l
— Malavika Mohanan (@MalavikaM_) September 8, 2026
நடிகை மாளவிகா மோகனன் சர்தார் 2 படத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளாராம். இதில் அவர், கார்த்தியின் மேலாளராக நடித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. மாளவிகா தமிழில் நடிக்கும் முதல் ஆக்ஷன் படமாக இது அமையும், மேலும் இதனால் அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் நடிக்க மாளவிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.