AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்

Malavika Mohanan Recent Interview | மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் - மாளவிகா மோகனன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2026 14:49 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது சினிமா பணியைத் தொடங்கினார் நடிகை மாளவிகா மோகனன். இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு இந்தி சினிமாவிலும் 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆன மாளவிகா மோகனன் தற்போது 2026-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகி உள்ளார். மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் நடித்து தற்போது பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அதன்படி நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் அந்தப் பேட்டியில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்:

பேட்ட படத்தில் பணியாற்றியபோது, ​​நான் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அப்போது திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளும் இருந்தன. அந்தச் சமயத்தில் நான் முற்றிலும் ஒரு புதுமுகமாக இருந்தேன் அதுவே எனது முதல் தமிழ்ப் படமாகும். பியான்ட் தி கிளவுட்ஸ் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், பெரிய படங்களிலோ அல்லது வணிக ரீதியான திரைப்படங்களிலோ நான் அதுவரை நடித்திருக்கவில்லை.

ஆனால், திரிஷா என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். நான் மிகவும் இயல்பாகவும் வசதியாகவும் உணரும் சூழலை அவர் உருவாக்கினார். அவர் பல திட்டங்களை வகுப்பார், என்னுடன் உரையாடுவார், மேலும் எல்லாவற்றிலும் என்னையும் ஒரு பகுதியாக ஈடுபடுத்திக்கொள்வார். வாரணாசியின் புறநகர்ப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ​​நாங்கள் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம். அவர் திட்டங்களை வகுப்பதிலும், ஓய்வு நேரத்தைச் செலவிடுவதிலும் என்னையும் தவறாமல் சேர்த்துக்கொள்வார். அவர் செய்த எல்லாவற்றிலும் மிகுந்த உண்மையான தன்மையே வெளிப்பட்டது என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Also Read… தமிழ் சினிமாவின் உண்மையான எண்டர்டெயினர் கே.எஸ்.ரவிக்குமார்… கொண்டாடும் ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியான இயக்குநர் இளனின் பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us