அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்க்கும் முதல்வர் விஜய்?
Ajith Kumar Car Race : முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதல்வர் விஜய் லண்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் ரேசையும் அவர் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அப்போது இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, செப்டம்பர் 8 : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வருகிற செப்டம்பர் 10, 2026 அன்று லண்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் செப்டம்பர் 16, 2026 வரை முதலீட்டாளர்களை சந்தித்து சேபவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் ரேசையும் அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்குமாரின் கார் ரேஸ் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் முதல்வர்?
லண்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் ‘MICHELIN LE MANS CUP’ என்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 16, 2026 வரை முதல்வர் விஜய் லண்டனில் பயணம் மேற்கொள்ளும் நிலையில், சில்வர்ஸ்டோனில் வரும் செப்டம்பர் 11, 12 ஆகிய 2 தேதிகளில் நடைபெறும் பந்தயத்தை நேரில் கண்டு ரசிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க : பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!




மேலும் இருவரும் சந்தித்து பேசவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2 பேரின் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் உச்ச நடிகர்களாக இருந்த 2 பேரின் படங்களும் வெளியாகும் கடுமையான போட்டி நிலவும். சமீப காலமாக 2 பேரும் ஒருவரையொருவர் பாராட்டி பேசி வருகின்றனர். அந்த வகையில் மோட்டார் பந்தய நகரம் உருவாக்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 3, 2026 அன்று பேசிய முதல்வர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் , இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில், தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்துவரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழகத்தை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு தெரிவித்திருந்தார்..மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான கவனத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளை அறிவித்த தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.