AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்.. குண்டுக்கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்..

முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்.. குண்டுக்கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்..
Dmk Removeeதிமுகவினர் குண்டுக்கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றம்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Sep 2026 10:48 AM IST

செப்டம்பர் 8, 2026: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 8) சட்டப்பேரவை நிறைவடைய உள்ள நிலையில், அவையில் திமுக கொறடா ஏ.வா. வேலு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது சட்டமன்ற அனுபவத்தில் பல முதலமைச்சர்களை பார்த்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அவையில் கண்ணியமாகப் பேசியதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சர் பேசியவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்:

மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும் ஏ.வா. வேலு குற்றம்சாட்டினார். ஆதாரமின்றி முதலமைச்சர் பேசியதாகவும், காவல்துறை மானியம் தொடர்பான தகவல்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: அன்று அன்னியன், இன்று அம்பி – முதல்வர் விஜய் பேச்சை விமர்சித்து பாஜக பதிவு..

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், சர்க்காரியா ஆணையம் தொடர்பான விவகாரம் குறித்துத்தானே அவையில் பேசப்பட்டதாக தெரிவித்தார். கலைஞர் நிதி பெற்றது தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், சர்க்காரியா ஆணையம் சுட்டிக்காட்டிய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர்:

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுகவினரால் High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள்:


இதையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Follow Us