மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.. நடிகர் சூரி செய்தியாளர் சந்திப்பு!
நடிகர் சூரி பேசியதாவது, இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும்.
மண்டாட்டி திரைப்பட பிரமோஷனுக்கு வருகை புரிந்த நடிகர் சூரி, திரைப்படத்தின் கதாநாயகி மகிமா ஆகியோர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் படம் குறித்தான பிரமோஷன் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் கோவையில் தான் இருப்போம். மீனவர்களுக்கான ஸ்பெஷல் ஷோ தற்பொழுது வரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை, அதனை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும். இந்தப் போட்டி பலருக்கும் தெரியாது இதனை திரைப்படமாக பார்க்கும் பொழுது அனைவருக்கும் புதுவிதமான அனுபவமாக இருக்கும். மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளும் படத்தில் உள்ளது அதனை படத்தில் பார்த்தால் அனைவருக்கும் தெரியும். அதனை முன்கூட்டியே கூறிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும் என்று அவர் கூறியுள்ளார். மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இதை ஒரு அனுபவம் ஒரு வாழ்க்கை படமாக நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.