AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்.. வந்த காசில் இரண்டு வீடுகள்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் சம்பவம்..

அக்கம்பக்கத்தில் நடப்பவற்றை கவனமாகக் கண்காணிக்கும் மிரியம், முக்கிய தகவல்களை மறந்துவிடாமல் இருக்க நோட்டுப் புத்தகத்திலும் குறிப்பெடுத்து வைத்துள்ளார். மேலும், அக்கம்பக்கத்தினரைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய தனிப்பட்ட ஆவணத் தொகுப்பையும் அவர் வைத்திருக்கிறார். இந்த வித்தியாசமான தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் தனது அன்றாட செலவுகளுக்கு உதவுவதுடன், இரண்டு வீடுகளை வாங்குவதற்கும் உதவியதாக மிரியம் தெரிவித்துள்ளார்.

கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்.. வந்த காசில் இரண்டு வீடுகள்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் சம்பவம்..
கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Sep 2026 21:16 PM IST

செப்டம்பர் 7, 2026: கொலம்பியாவில் அக்கம்பக்கத்தினரின் கிசுகிசுக்களை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டும் 67 வயது பெண் குறித்த தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. குயின்டியோ மாகாணத்தின் ஆர்மீனியா நகரைச் சேர்ந்த மிரியம் என்பவர், அப்பகுதியில் நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து தகவல்களை சேகரித்து, ஆர்வமுள்ளவர்களிடம் அவற்றை விற்பனை செய்து வருகிறார். காதல் பிரச்சினைகள், தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டைகள், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் அவரது ‘கிசுகிசு’ பட்டியலில் இடம்பெறுகின்றன.

கிசுகிசு சொல்ல பணம் வாங்கும் பெண்:

“எனக்கு கிசுகிசு மிகவும் பிடிக்கும்” எனக் கூறும் மிரியம், தன்னை ஒரு தொழில்முறை ‘Chismosa’ என அழைத்துக்கொள்கிறார். ஸ்பானிஷ் மொழியில் ‘Chismosa’ என்பது கிசுகிசு பேசுபவர் அல்லது தகவல்களைச் சேகரிப்பவர் என்ற பொருளைக் கொண்டதாகும்.

மேலும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!

சிறிய தகவல்களுக்கு சில ஆயிரம் கொலம்பிய பெசோக்களும், முக்கியமான மற்றும் விரிவான தகவல்களுக்கு அதிக தொகையும் வசூலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை, மனைவி வெளியூர் செல்லும்போது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக 7 லட்சம் கொலம்பிய பெசோக்கள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல்களை மறக்காமல் இருக்க நோட்ஸ்:

அக்கம்பக்கத்தில் நடப்பவற்றை கவனமாகக் கண்காணிக்கும் மிரியம், முக்கிய தகவல்களை மறந்துவிடாமல் இருக்க நோட்டுப் புத்தகத்திலும் குறிப்பெடுத்து வைத்துள்ளார். மேலும், அக்கம்பக்கத்தினரைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய தனிப்பட்ட ஆவணத் தொகுப்பையும் அவர் வைத்திருக்கிறார்.

இந்த வித்தியாசமான தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் தனது அன்றாட செலவுகளுக்கு உதவுவதுடன், இரண்டு வீடுகளை வாங்குவதற்கும் உதவியதாக மிரியம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:  இடுப்பளவு வெள்ள நீரில் திருமணம் செய்த ஜோடி.. பிலிப்பைன்ஸில் சுவாரஸ்ய சம்பவம்!

அவரது செயல்பாடுகள் தனியுரிமையை மீறுவதாக சில அக்கம்பக்கத்தினர் விமர்சித்தாலும், தன்னிடம் ஆதாரம் இல்லாமல் எந்த தகவலையும் பரப்புவதில்லை என மிரியம் கூறுகிறார். அப்பகுதியில் நடக்கும் அனைத்தையும் அறிந்திருப்பதால், அவருக்கு “கிசுகிசு ராணி” என்ற பெயரும் கிடைத்துள்ளது. “கிசுகிசுதான் என் வாழ்க்கை; அது என் ரத்தத்தில் ஓடுகிறது” என மிரியம் தெரிவித்துள்ளார்.

Follow Us