AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!

Congo Marriage Function Fire Accident Tragedy | காங்கோவில் உள்ள கின்ஷாவா என்ற பகுதியில் ஒரு ஹோட்டலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!
தீ விபத்து ஏற்பட்ட இடம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Sep 2026 20:31 PM IST

கின்ஷாசா, செப்டம்பர் 06 : காங்கோவில் (Congo) உள்ள கின்ஷாசா என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கிய அந்த திருமண கொண்டாட்டம், பெரும் சோகத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், திருமண விழாவில் தீ விபத்து ஏற்பட்டு 22 பேர் உயிரிழந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு தான் காங்கோ. இந்த நாட்டின் தலைநகர் தான் கின்ஷாவா. இந்த நகரின் லிங்வாலா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (செப்டம்பர் 05, 2026) இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக தீ கட்டடம் முழுவதும் மலமலவென பரவியுள்ளது. இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதையும் படிங்க : நேபாளத்துக்கு தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா.. 5.5 டன் மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைப்பு.. நிலைமை என்ன?

விபத்தில் சிக்கி 22 பேர் பலியான சோகம்

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர். அவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 22 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us