AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போரை முடிவுக்கு கொண்டு வருவதே மனிதகுலத்தின் அழைப்பு” – அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

“போரின் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அதே நேரத்தில், அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் மனிதகுலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. முடிவில்லாத போர்களில் இருந்து விலகி, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதே மனிதகுலத்தின் அழைப்பு” – அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 01 Sep 2026 08:27 AM IST

செப்டம்பர் 1, 2026: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டையொட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இருதரப்பு சந்திப்பில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – பிரதமர் மோடி:


“போரின் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அதே நேரத்தில், அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் மனிதகுலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. முடிவில்லாத போர்களில் இருந்து விலகி, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மனிதகுலத்தின் எதிர்பார்ப்பு என்றும், மகாத்மா காந்தி மற்றும் கவுதம புத்தரின் தேசமான இந்தியா, அமைதியின் பாதையையே உலகிற்கு எடுத்துரைக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிபர் புதினை வரவேற்ற பிரதமர் மோடி:

சந்திப்பின் தொடக்கத்தில் அதிபர் புதினை வரவேற்ற பிரதமர் மோடி, “எனது நண்பரே, உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார். புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முந்தைய பயணம் மிகவும் வெற்றிகரமாகவும், நினைவுகூரத்தக்கதாகவும் அமைந்ததாக கூறிய அவர், அந்த பயணம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற முந்தைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதில் இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – ரஷ்யா உறவு மேலும் மேம்படுத்த திட்டம்:

இந்த சந்திப்பில் இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுவதாகவும் அவர் கூறினார். மேலும், 2025ஆம் ஆண்டில் இந்தியா – ரஷ்யா இடையேயான சுற்றுலாப் பயணிகள் பரிமாற்றம் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி குறிப்பிட்ட வெப்சைட்.. உள்ளூர் தயாரிப்பு கோரிக்கை.. மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது என்ன?

ஒரே காரில் பயணம் மேற்கொண்ட இரு நாட்டு தலைவர்கள்:

இதனிடையே, அடுத்த வாரம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் புதின் இந்தியா வரவுள்ளார். அவரது வருகையை இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அதிபர் புதினின் இந்திய வருகை, மாஸ்கோ – புதுடெல்லி இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற SCO மாநாட்டின்போதும் பிரதமர் மோடி – அதிபர் புதின் இடையேயான ‘கார் தூதரகம்’ கவனம் பெற்றது. அப்போது அதிபர் புதின் பின்னர் இந்தியா வந்திருந்த நிலையில், தற்போது பிஷ்கெக்கிலும் இந்த நடைமுறை தொடர்ந்துள்ளது. இரு தலைவர்களும் ஒரே காரில் பயணித்து உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்டனர்.

Follow Us