AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு..

Gas Cylinder Price Hike: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டர் ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை

மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Sep 2026 07:49 AM IST

செப்டம்பர் 1, 2026: செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு:

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டர் ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையான ரூ.957.50-க்கே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: வீட்டு கடனை திருப்பி செலுத்திய பிறகு இந்த ஆவணங்களை வாங்க மறக்காதீர்கள்.. என்ன என்ன தெரியுமா?

விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.200 அளவிற்கு அதிரடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிட்டா கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us