AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிட்டா கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

Today Is The Last Date To Complete eKYC For Gas Cylinder | கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயமாக கூறியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டருக்கு இகேஒய்சி மேற்கொள்ள இன்று கடைசி நாள்.

கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிட்டா கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2026 23:03 PM IST

இந்தியாவில் ஏராளமான குடும்பங்கள் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) இணைப்பை வைத்துள்ளனர். தங்களது சமையல் தேவைக்கு அவர்கள் கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பல கோடி குடும்பங்களின் முதன்மை ஆதாரமாக கேஸ் சிலிண்டர்கள் உள்ள நிலையில், இந்த ஒரு விஷயத்தை செய்ய தவறும் பட்சத்தில் கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டருக்கு இகேஒய்சி (eKYC – Know Your Customer) மேற்கொள்ளவில்லை என்றால், தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி மேற்கொள்ள இன்று (ஆகஸ்ட் 31, 2026) கடைசி தேதியாக உள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் இகேஒய்சியை இன்றைக்குள் முடிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சியை கட்டாயமாக்கிய மத்திய அரசு

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவது, சமையல் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவது உள்ளிட்டவற்றை தடுக்கவும், தகுதியானர்வர்களுக்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் சென்று சேர்வதை உறுதி செய்யவும் அரசு இந்த கேஒய்சியை கட்டாயமாக மாற்றியது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள ஆகஸ்ட் 15, 2026 அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கிய நபர்.. தற்போது ரூ.600 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் சொந்தக்காரர்.. யார் இந்த சசிகுமார்?

அப்போதும் சிலர் கேஒய்சி முடிக்காமல் இருந்த நிலையில், அது ஆகஸ்ட் 23 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டு, பிறகு ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக நீட்டித்து அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றுடன் (ஆகஸ்ட் 31, 2026) கேஸ் சிலிண்டர் கேஒய்சி காலக்கெடு நிறைவடைகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கேஒய்சியை இன்றுக்குள் முடிக்கவில்லை என்றால் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற முடியாத நிலை ஏற்படும்.

கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்வது எப்படி?

  1. நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
  2. அதேபோல Aadhaar FaceRD செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  3. பிறகு கேஸ் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, உள்ளே நுழைய வேண்டும்.
  4. பிறகு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள LPG e-KYC என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  5. அதில் கொடுப்பட்டுள்ள விவரங்களை படித்து ஒப்புதல் வழங்கிய பின் உங்களது முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.

Follow Us