ஒரு மாத EMI-ஐ தவர விட்டால் என்ன நடக்கும்?.. இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
What Will Happen If You Any One EMI | கடனை வாங்கிவிட்டு மாத தவணை முறையில் அதனை திருப்பி செலுத்தும் முறை தான் தற்போது பிரபலாமாக உள்ளது. இந்த நிலையில், ஒரு மாதம் மாத தவணை செலுத்த தவறினால் என்ன நடக்கும் என பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் மாத தவணை செலுத்தாத நபர்களையே பார்க்க முடியாது. வீட்டு கடன் (Home Loan), வாகன கடன் (Vehicle Loan), தனிநபர் கடன் (Personal Loan) என தங்களது பண தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பலரும் கடன் வாங்குகின்றனர். வாங்கிய கடனை மாதம் மாதம் சிறிய சிறிய தொகையாக திருப்பி செலுத்தலாம் என்பதால், பலரும் தயங்காமல் கடனை வாங்கி விடுகின்றனர். இந்த நிலையில், ஏதேனும் ஒரு மாத தவணை செலுத்த தவறினால் என்ன ஆகும், அது ஒருவரின் கடன் வரலாற்றில் எத்தைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாத தவணையை தவற விடுவதால் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும்?
மாத சம்பளம் வாங்கும் நபர்கள் தான் பெரும்பாலும், மாத தவணை முறையில் கடன் வாங்குகின்றனர். இத்தகைய சூழலில் ஏதேனும் ஒரு மாதம் அவர்களுக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டால் அவர்களால் அந்த மாத தவணையை செலுத்த முடியாமல் போய்விடுகிறது. சிலர் மாத தவணையை ஆட்டோ டெபிட் முறையில் வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் பணம் இல்லை என்றாலும் மாத தவணை பிடிக்கப்படாது. இந்த நிலையில் தான், சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க : நிதி பாதுகாப்பு பெற , 20 வயதில் இவற்றை செய்யுங்கள்.. என்ன என்ன தெரியுமா?
அபராத கட்டணம் விதிக்கப்படும்
வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ நீங்கள் கடன் பெற்று ஒரு மாத தவணையை தவறவிட்டால், அதாவது உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றால் அபராத கட்டணம், வட்டி மற்றும் மாத தவணை ஆகியவற்றை சேர்த்துதான் செலுத்த வேண்டும். அவ்வாறு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அவற்றை முழுவதுமாக செலுத்தவில்லை என்றால், அது அந்த நபரின் சிபில் ஸ்கோரை மிக கடுமையாக பாதிக்கும்.
இதையும் படிங்க : வங்கி கடனை அடைக்க பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
இவ்வாறு நீங்கள் தவறவிடும் மாத தவணைகள் உங்களிம் சிபில் ஸ்கோரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை நீங்கள் மறுபடியும் கடன் பெற முயற்சி செய்யும்போது, இந்த தவறவிட்ட மாத தவணையை காட்டி வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம். எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.