நேபாள வெள்ள பாதிப்பு – என்ன நடந்தது? டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்
Nepal Floods : சென்னையை சேர்ந்த டிராவல் உரிமையாளர், தங்கள் நிறுவனம் சார்பில் சீன எல்லைக்கு சுற்றுலா சென்றதாகவும், அவர்களது நிலை குறித்து சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் பேசியது தொடர்பாக வரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 30 : சென்னையை சேர்ந்த டிராவல் உரிமையாளர், தங்கள் நிறுவனம் சார்பில் சீன எல்லைக்கு சுற்றுலா சென்றதாகவும், அவர்களது நிலை குறித்து சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேபாளத்தில் மட்டும் 752 பேரும், திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு தகவல்
மேலும், 592 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 3,048 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 14, 2026 அன்று 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather report: அடுத்த 4 நாட்களுக்கு 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம் எச்சரிக்கை




14 நாட்கள் பயணமாக சென்ற அவர்கள்,ஆகஸ்ட் 28, 2026 நேற்று முன்தினம் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் அவர்கள் குறித்து தகவல் இல்லை. தூதர மையத்தின் வெள்ள பாதிப்பு குறித்து வெளியான சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் தங்களது டிராவல் ஏஜென்சி மூலம் சென்றவர்கள் என அதன் உரிமையாளர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மகாதேவ் கைலாஷ் யாத்ரா டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் மகன் சத்ய நாராயணன் என்பவர் தலைமையில் அவர்கள் சென்றுள்ளனர். சென்னை செங்குன்றம், குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் அவருடன் சென்றிருக்கின்ரனர். .
பயணம் முடிந்து ஆகஸ்ட் 28, 2026 அன்று சென்னை திரும்ப வேண்டிய நிலையில் நேபாள சீன எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இயற்கை உதவியுடன் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தமிழக கிராமம் – உலகுக்கே முன்னோடி!
இந்தநிலையில், நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். பலர் சீன பகுதிக்குள் ஓடியுள்ளதாக தெரிகிறது. அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றார்.