AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பரிதாப மரணம்

Dindigul Accident Tragedy : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரமாக சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் அடையாளம் தெரியாத வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 4 சிறுவர்களுக்கும் 10 வயதிற்குள்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து  – 4 சிறுவர்கள் பரிதாப மரணம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2026 19:17 PM IST

திண்டுக்கல், ஆகஸ்ட் 30 : திண்டுக்கல் அருகே ஆடுமேய்த்த சிறுவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய நிலையில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஒட்டுநரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டியை விரைவில் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரமாக யோக வர்ஷினி, அனன்யா, தனுஷ்ரீர மற்றும் மோசிகீரன் ஆகியோர் சாலையோரமாக ஆடுமேய்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 4 பேருக்கும் 10 வயதிற்குள் தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த சிறுவர்கள் மீது அடையாளம் தெரியாத வேன் ஒன்று அதிகவேகமாக மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : சிசிடிவி இருந்தும்எந்த பயனும் இல்லை… கோவையில் பைக் திருட்டு வழக்கில் திணறும் போலீஸ்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 சிறுவர்களும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. குழந்தைகள் மீது ஏற்றிவிட்டு தப்பியோடிய வாகன ஓட்டி மீது வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல திருவாரூர் பெரிய பாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் தனது மனைவி, குழந்தைகள் உறவினர்களுடன் ஆட்டோவில் திருவள்ளூர் அருகே பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

ஆட்டோவை லோகநாதன் ஓட்டி வந்திருக்கிறார். சென்னை – பெரியபாளையம் நெடுஞ்சாலையில் எம்சிடி நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ வந்தபோது முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத லாரியின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க : காவிரி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பிரமாணப் பத்திரம்.. விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்க வலியுறுத்தல்!

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூதாட்டி ராதா, சிறுவன் கோகுல், பூங்கொடி ஆகியோர் சம்வப இடத்திலேயே பலியாகினர். ஆட்டோவை ஓட்டிய லோகநாதன் உள்ளிட்டோர் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us