AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் 1000 கோடி மோசடி… திணறும் போலீஸ்… சதுரங்க வேட்டையை மிஞ்சிய சம்பவம்

Madurai Online App Scam : மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ.1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ற்போது 3வது நாளாக போலீசார் புகார்களைப் பெற்றுவரும் நிலையில், 3 முகவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் 1000 கோடி மோசடி… திணறும் போலீஸ்… சதுரங்க வேட்டையை மிஞ்சிய சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Aug 2026 15:26 PM IST

மதுரை, ஆகஸ்ட் 30 : மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ.1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பணம் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 3வது நாளாக போலீசார் புகார்களைப் பெற்றுவரும் நிலையில், 3 முகவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் 1000 கோடி மோசடி

மதுரை, மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் 3வது நாளாக ஆகஸ்ட் 30, 2026 இன்றும் புகார் கொடுக்க கூட்டம் கூட்டமாக வருகை வருவதால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் இன்று ஒரு நாள் மட்டும் இதுவரை 1200 பேர் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ள நிலையில், தலா ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மனுக்களை பெற முடியாமல் காவல்துறையிர் திணறி வருகின்றனர்.

இதையும் படிக்க : “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!

எஃப்கியூஎல் மற்றும் விஜே ஆகிய ஆன்லைன் செயலிகளில் முதலீடு செய்தால் 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடு பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக மக்கள் அளித்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. பணம் வசூலித்த முகவர்கள் தங்களுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ததங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவி்திருக்கிறது.

இந்த 2 செயலிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள் முதலீடு செய்தவர்களுக்கு மொபைல் போன் செயலியை அனுப்பியிருக்கின்றனர். அந்த செயலியில் மக்கள் முதலீடு செய்த பணம் டாலர் மதிப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் செயலியின் படி டிரேடிங் செய்தால் டாலரின் மதிப்பு உயரும் என்று முகவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்படி முதலீடு செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் பணமும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை நம்பி மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதி மக்கள் ஏராளமானோர் முதலீடு செய்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : “தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

இந்த திட்டங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட ரஞ்சித் மற்றும் அருண் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மேலூர் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், முகவர்கள் ரஞ்சித் மற்றும் அருண் ஆகியோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிப்பதற்காக திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பெண்கள் வரிசையில் நின்று தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow Us