AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் பரபரப்பு – லட்சக்கணக்கில் ஆன்லைன் மோசடி… பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியல்

Online Scam in Madurai : மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் என்ற பெயரில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பரபரப்பு – லட்சக்கணக்கில் ஆன்லைன் மோசடி… பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2026 19:09 PM IST

மதுரை, ஆகஸ்ட் 28 : மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஃப்க்யூஎல் (FQL) ஆன்லைன் ஆப் முதலீட்டு மோசடியை கண்டித்து பணத்தை இழந்த ஏராளமான மக்கள் மதுரை
– மேலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் லட்சக்கணக்கில் ஆன்லைன் மோசடி

மேலும், தங்கள் பணத்தை உடனடியாக மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நத்தம் அருகே ரெட்டியாபட்டியில் பண மோசடி செய்த நபர்களை கைது செய்து போலீஸ் அழைத்துச் சென்றனர். மேலூர் அருகே கட்டயம்பட்டியில் எஃப்க்யூஎல் நிறுவன ஏஜென்ட் வீட்டை மக்கள் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இல்லாததால் பேரவை சீக்கிரம் முடியும் என நினைத்தேன்… பிரேமலதா மீண்டும் அட்டாக்!

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் முதியவர்களிடம் ஆன்லைன் வர்த்தக மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை 1,527 நபர்களிடம் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், பெண்கள் அதிகளவில் கூடியுள்ள நிலையில், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டுப் புகார் மனுக்கள் வாங்கப்படுகின்றன.

இதனிடையே, முகவராகச் செயல்பட்ட கட்டையப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரைக் கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் மேலூர் – திருச்சி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எஃப்கியூஎல் என்ற ஆன்லைன் செயலியில் பணம் செலுத்தினால் அது 2 அல்லது 3 மாதங்களில் 2 மடங்கு அதிகமாக பயனர்களுக்கு வழங்கப்படும் என்று கூறி மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மோசடி நடைபெற்று வந்திருக்கிறது. இது கடந்த 2 வருடங்களா நடைபெற்று வந்தததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பணம் செலுத்திய பயனர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்.. பின்னணியில் ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கு.. என்ன காரணம்!

இந்த திட்டங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட ரஞ்சித் மற்றும் அருண் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மேலூர் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், முகவர்கள் ரஞ்சித் மற்றும் அருண் ஆகியோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிப்பதற்காக திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பெண்கள் வரிசையில் நின்று தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow Us