AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் இலவச சைக்கிள் வழங்கல்.. தமிழக அரசின் அதிரடி மூவ்!

Modern Bicycles Tender Issued : தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள்கள் வழங்குவதற்காக டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லை மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் இலவச சைக்கிள் வழங்கல்.. தமிழக அரசின் அதிரடி மூவ்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Aug 2026 19:18 PM IST

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில் வைக்கும் வகையில் ஹெல்மெட் உடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார். அதன்படி, இதற்கான ஒப்பந்தங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சுமார் ரூ. 277 கோடியில் 5 லட்சத்து 32 ஆயிரம் சைக்கிள்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

150 நாள்களில் சைக்கிள்- உபகரணங்கள் வழங்க வேண்டும்

இது தொடர்பான கொள்முதல் ஆணை பெறப்பட்ட நாளில் இருந்து சுமார் 150 நாட்களுக்குள் சைக்கிள்கள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சைக்கிள்களில் முன் பகுதியில் புத்தகம், பேக் உள்ளிட்ட பொருட்கள் வைப்பதற்கான கூடை அமைக்கப்பட்டு இருக்கும். பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு நிறங்களில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்.. பின்னணியில் ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கு.. என்ன காரணம்!

மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

தற்போது, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த சைக்கிள்கள் நவீன சைக்கிள்களாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதனை உறுதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில்கள் வைக்கும் வசதி, சைக்கிள் ஓட்டுவதற்கான ஹெல்மெட் ஆகியவற்றுடன் நவீன மாடல் சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி இருந்தது.

நிகழ் கல்வியாண்டு முதல் இலவச சைக்கிள் வழங்கல்

இந்த கல்வியாண்டு முதல் விலையில்லா சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களுக்கு மாற்றாக தற்போது வழங்கப்படும் சைக்கிள் நவீன மாடல் சைக்கிளாக உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!

Follow Us