அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!
Finance Minister Maria Wilson : தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அமைச்சர் பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா என்று நீதிமன்றம் கேள்வியும் எழுப்பி உள்ளது .
புதுச்சேரி மாநிலம், எழில் நகரில் வசித்து வரும் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத்தின் வீடு புகுந்து மரிய வில்சன் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 28-ஆம் தேதி) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மரியவில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசல் அல்ல
அப்போது, அமைச்சர் மரிய வில்சன் தரப்பின் ஆஜரான வழக்கறிஞர், தற்போது, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்றத்திற்கு வர முடியாது என்று சொல்வதற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர் ஆகவே இருக்கிறார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள்: இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை




அமைச்சரானதால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா
அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவர் அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் ஆஜராக மாட்டாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனிடையே, புதுச்சேரி காவல்துறை சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற நிகழ்வில் அமைச்சர் மரிய வில்சன் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இதற்கு, வேளாங்கண்ணிக்கு செல்லும் நிதித்துறை அமைச்சர், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது.
அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் கிடையாது
அமைச்சர் என்பவர் சட்டத்துக்கு மேலானவர் கிடையாது என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் எப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் மற்றும் மரிய குலோத் ஆகியோரிடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், அவர்களுடைய சமரசம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘தனித்தொகுதி’ என்ற சொல்லை மாற்றுக!.. சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ வைத்த முக்கிய கோரிக்கை!!