பக்கா பேமிலி படம்.. நயன்தாரா – கவினின் ஹாய் படம் நல்ல இருக்கிறதா இல்லையா? – விமர்சனங்கள் இதோ!
Hi Movie review: நயன்தாராவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தமிழ் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் ஹாய். இப்படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், இன்று (28/08/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
பாடலாசிரியரும், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநருமான இருந்துவந்தவர்தான் விஷ்ணு எடவன் (Vishnu Edavan). இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படம்தான் ஹாய் (Hi). இதில் கவின் (Kavin)ஹீரோவாக நடிக்க, நடிகை நயன்தாரா (Nayanthara) நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டிலே தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. நடிகர் கவினை விடவும் நயன்தாராவுக்கு வயது அதிகம் என்ற நிலையில், இவர்களின் ஜோடி எவ்வாறு படத்தில் இருக்கும் என பல விமர்சனங்கள் வந்தது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar), கே.பாக்யராஜ், பிரபு போன்ற முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த ஹாய் படமானது ரோமெண்டிக் மற்றும் காமடி கதைக்களத்திலஅமைந்துள்ள ஒரு பேமிலி படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்று (28/08/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: அழகும் காதலும் கலந்த இனிமை.. அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படம் மனதை தொட்டதா?
நயன்தாரா மற்றும் கவினின் ஜோடி எப்படி இருக்கிறது:
#Hi has been watched.
As someone who loves well-made romcoms, this @VishnuEdavan1 film put a huge smile on my face.
Such a simple film that remains simple till the very end, and that is quite the difficult feat to pull off. #Nayanthara is super lovely and wonderful, and… pic.twitter.com/Sab2saLZKt
— Avinash Ramachandran (@Avinash_R13) August 28, 2026
இந்த ஹாய் படமானது பக்க பேமிலி கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா தேவியானி என்ற வேடத்திலும், கவின் மயிலசாமி என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். கவின் தனது அடக்கமான அணுகுமுறையில் அற்புதமாக நடித்துள்ளார், கதாபாத்திரத்தை மிகைப்படுத்திக் காட்ட அவர் ஒருபோதும் மெனக்கெடவில்லை. நயன்தாராவுக்கு, நாம் வழக்கமாக அவருடன் தொடர்புபடுத்தும் பிரம்மாண்டமான பிம்பத்தை விட, அன்பானவராகவும் எளிதில் அணுகக்கூடியவராகவும் இருக்க அனுமதிக்கும் ஒரு கதாபாத்திரமாக இப்படத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் நானி – கீர்த்தி சுரேஷ் காம்போ.. தி பாரடைஸ் பட சிறப்புப் பாடலில் நடனமாடுவதை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!
ஹாய் திரைப்படத்தின் கதை எப்படி இருக்கு:
ஹாய் திரைப்படத்தின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், தனது தன்மையை மாற்றிக்கொண்டே இருப்பதுதான். ஒப்பீட்டளவில் இளமைக்கால காதல் கதையாகத் தொடங்கும் இது, படிப்படியாக அதிக உணர்ச்சிப்பூர்வமான குடும்ப நாடகமாக விரிகிறது. ஆச்சரியப்படும் விதமாக, அந்த மாற்றத்தில்தான் இப்படம் அதன் வலுவான தருணங்கள் இருக்கிறது.
ஹாய் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாமா?:
இந்த ஹாய் திரைப்படத்தை, அவசரமான அல்லது ஆக்ரோஷமான கதையை விரும்பாத, மாறாகக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அமர்ந்து, நிதானமாகப் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படத்தைத் தேடுபவர்களுக்கானது இந்தப் படம். நிச்சயமாக ஒரு முறையாவது திரையரங்குகளில் பார்த்து ரசிக்கவேண்டிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.