Once More: அழகும் காதலும் கலந்த இனிமை.. அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படம் மனதை தொட்டதா?
Once More Movie Review: அர்ஜுன் தாஸின் நடிப்பில், 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள 2வது திரைப்படம்தான் ஒன்ஸ் மோர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், இன்று (28/08/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் நாயகனாக நடித்து இளம் ரசிகர்களை கவர்ந்துவருபவர் நடிகர் அர்ஜுன்தாஸ் (Arjun Das). தனது குரலினால் பல ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். மாஸ்டர் (Master) படத்தில் தாஸ் என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானார். அதற்கு முன்பும் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் லீட் நாயகனாக, வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இறுதியாக கான் சிட்டி (Con City) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், 2026 மார்ச் மாதத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த வரிசையில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஒன்ஸ் மோர் (Once More). இதை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் (Vignesh Srikanth) இயக்க, மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அர்ஜூன்தாஸ், அதிதி சங்கர் (Aditi Shankar) மற்றும் சோனா ஒலிக்கல் (Sona Olickal) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருகிறது இப்படம். இந்நிலையில் திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இதன் ரிவியூஸ் பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படம் எப்படி இருக்கு:
#OnceMore First Half Review 🍿
– A Simple Romantic Drama carried by Mature Performances and a Terrific Score..🤝
– Very Subtle #ArjunDas..⭐ A Very Different Role for him compared to his previous outings.. Energetic #AditiShankar Steals the Show..✌️
– Hesham’s Songs and Score… pic.twitter.com/K7WfGC5Zre— Laxmi Kanth (@iammoviebuff007) August 28, 2026
இந்த ஒன்ஸ் மோர் திரைப்படமானது ஒரு நேர்த்தியான இசை சார்ந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில், அழகும் காதலும் கலந்த ஒரு இனிமையான பயணம் அமைகிறது. அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம் பல இளைஞர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறதாக கூறப்படுகிறது. முக்கோணக் காதல் கதை, நிகழ்காலத்தின் ஒரு இக்கட்டான தருணத்தில் கடந்த காலக் காதல் மீண்டும் வருகிறது என்பது தொடர்பான கதையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: லூசர்… துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட செகண்ட் சிங்கிள் வெளியீடு!
ஒன்ஸ் மோர் படத்தில் ஹெஷம் அப்துலின் இசை எப்படி:
இசையமைப்பாளர் ஹெஷம் அப்துலை இப்படத்தின் 2வது ஹீரோ என்றே கூறலாம். படம் முழுவதுமாக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். இவரின் இசையில் இப்படம் உருவாகியிருக்கிறது என கூறலாம்.
ஆக மொத்தத்தில் ஒன்ஸ் மோர் படம் எப்படி இருக்கு தெரியுமா?:
பெரிய மோதல்கள் ஏதுமின்றி, அமைதியான தொனியில் படம் மிகவும் மென்மையான வேகத்தில் நகர்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் வெறித்தனமான மணிரத்னம் ரசிகர் போலத் தெரிகிறது. பக்குவமான நடிப்பும், அருமையான பின்னணி இசையும் கொண்டு செல்லும் ஒரு எளிமையான காதல் படமாக இது அமைந்துள்ளது. பீல் குட் லவ் படத்தை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். மேலும் இது காதலர்களுக்கு ஏற்ற திரைப்படம் என சொல்லலாம்.