Arjun Das: லோகேஷ் அப்படி பண்ணுவாருனு நா சாத்தியமா எதிர்பாக்கல – அர்ஜுன் தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Arjun Das About Lokesh Kanagaraj:: தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அர்ஜுன் தாஸ். இவர் கோலிவுட் மற்றும் டோலிவுட் போன்ற சினிமாக்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து அசத்திவருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், லோகேஷ் கனகராஜ் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் சினிமாவில் வில்லனாகவும், ஹீரோவாகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்த தி ஓஜி (The OG) படத்தில் முக்கிய வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களிலும் நடிக்கவுள்ளார் என கூறப்டுகிறது. இந்நிலையில் இவர் தமிழில் கதாநாயகனாக நடித்திருந்த புதிய திரைப்படத்தான் கான் சிட்டி (Con City). இப்படமானது 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியோடு திரையரங்குகளில் ஒளிபரப்பாகிவருகிறது. இப்படமானது மின்சாரம், பண பிரச்சனை மற்றும் பண கொள்ளை போன்ற அதிரடி நகைச்சுவை மற்றும் எமோஷனல் நிறைந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பெண் (Anna Ben) நடித்துள்ளார். இந்நிலையில் அன்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அர்ஜுன்தாஸ், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) சினிமாவில் நடிக்கவருவார் என தான் எதிர்பார்க்கவில்லை என விவரமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல – அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்
லோகேஷ் கனகராஜ் நடிகராக நுழைந்தது குறித்து தனது கருத்தை பகிர்ந்த அர்ஜுன்தாஸ்:
அந்த நேர்காணலில் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “நான் லோகேஷ் இவ்வாறு நடிகராக நடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஒரு சிறிய காட்சி நியாபகம் வருகிறது. மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் கடைசி அது. அதில் லோகேஷ் ஓர் சீனில் வந்திருப்பாரு. அந்த காட்சியை கூட விஜய் சார்தான் டிரேட் பண்ணிருந்தாரு. அந்த காட்சியில் நடிக்க லோகேஷ் கனகராஜ் அவ்வளவு பயப்பட்டார். ஆனால் நான் சமீபத்தில், லோகேஷ் நடித்த டிசி படத்தில் பல காட்சிகளை பார்த்தேன். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காண்பித்தார் எனக்கு.
இதையும் படிங்க: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?
அந்த காட்ச்சிகளை எல்லாம் பார்க்கும் போது பிரம்மதமாக இருந்தது. இதுவரைக்கும் லோகேஷ் கனகராஜை, கேமராவுக்கு பின்னல் (இயக்குநராக) பார்த்திருக்கிறேன். ஆனால் டிசி படத்தில் நான் பார்த்த காட்சியில் அவர் கேமராவுக்கு முன் நடிகராக நடிப்பது வித்தியாசமாக இருந்தது. அவரு தற்போது ஹீரோவாக அறிமுகமானது எனக்கு மிக்க மகிழ்ச்சி” என அவர் அதில் வெளிப்படையாக பேசினார்.
கான் சிட்டி திரைப்படம் குறித்த அர்ஜுன் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Thank you so much Sinish 🤗♥️ https://t.co/URPUSa57vV
— Arjun Das (@iam_arjundas) June 26, 2026
தற்போது கான் சிட்டி படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படமானது குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இது அர்ஜுன் தாஸிற்கு வெற்றிப்படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



