AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம் – விஷ்ணு விஷால்

Vishnu Vishal talks about Lal Salaam Movie | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் சமீப காலமாக தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி அவர் அளித்தப் பேட்டியில் லால் சலாம் படத்தில் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம் – விஷ்ணு விஷால்
ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2026 12:40 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 09-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லால் சலாம். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தின் வரவேற்பு குறைந்த காரணத்தால் படக்குழுவும் அதனை சமாளிக்க பல வையில் பேசி வந்தது. அதில் ஒன்றுதான் படத்தின் பல ஃபுட்டேஜ்கள் நிறைந்த ஹாட்டிஸ்க் காணாமல் போனது என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது. இந்த விசயம் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடித்து உள்ளார் என்பதாலேயே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு பல நெகட்டிவான விமர்சனங்களையே பெற்று வந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்:

நான் லால் சலாம் படத்தில் நடித்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. அதில் நான் நடித்தது ஏதோ ஒரு சிறிய கதாபாத்திரம் அல்ல. மிக முக்கியமான முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றாகவே நடித்தேன். ஆனால், படம் உருவான விதம் நான் எதிர்பார்த்தபடியோ அல்லது என்னிடம் விவரிக்கப்பட்டபடியோ அமையவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. வெறும் பெரிய பெயர்கள் அல்லது பிரபலங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் ஒரு படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. அதில் எனக்கு இனி எந்த மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. இனிவரும் காலங்களில், நல்ல திரைக்கதைகள், எனக்கு நன்கு அறிமுகமானவர்கள், புதுமுகங்கள், வளர்ந்து வரும் இயக்குநர்கள் மற்றும் என்னுடன் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் ஆகியோருடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன். பெரிய பெயர்கள் அல்லது பிரபலங்கள் என்னை இனி ஈர்ப்பதில்லை.

Also Read… 3 ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதி… முகத்தில் வீக்கம்… விஷ்ணு விஷால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

இணையத்தில் வைரலாகும் விஷ்ணு விஷால் பேச்சு:

Also Read… ஒரு சீன் 90 டேக்ஸ் எடுத்துச்சு… வாரணாசி படம் குறித்து பிரித்விராஜ் சுகுமாரன் ஓபன் டாக்

Follow Us