மலையால சினிமாவில் இந்த ட்ரீடம் இன்வெஸ்டிகேஷன் த்ரிலர் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
investigative thriller film Dridam from Malayalam cinema | மலையாள சினிமாவில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் ட்ரீடம். இந்த ட்ரீடம் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஷேன் நிகாம். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான படங்களில் நடித்து வந்த நடிகர் ஷேன் நிகாம் தற்போது ஆக்ஷன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் வெளியான ட்ரீடம் படத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கடந்த மே மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த ட்ரீடம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்த நடிகர் ஷேன் நிகாம் தனது கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வந்து வித்யாசமான கதையில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இயக்குநர் மார்ட்டின் ஜோசஃப் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான E4 என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பெட் டைம் ஸ்டோரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீராக் சாஜி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஓடிடியில் வெளியாகி உள்ள ட்ரீடம் படம் எப்படி இருக்கு:
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குழிநிலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக தனது போலீஸ் பணியை தொடங்குகிறார் நாயகன் ஷேன் நிகாம். அந்த ஊரில் பெரிய அளவில் தவறுகள் எதுவும் நடைபெறாது என்று அவரது மாமா ஐஜி தெரிவித்து இருப்பார். அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் ஷேன் நிகாம் சென்ற போது மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்று ஒரு குடும்பத்தை போல கவனித்து கொள்கிறார்கள்.




Also Read… ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் ஓ லவ் படக்குழு – வைரலாகும் அப்டேட்
இப்படி இருக்கும் நிலையில் ஷேன் நிகாம் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அங்கு ஒரு சடலம் கிடைக்கின்றது. இறந்து சுமார் 1 வாரம் ஆன நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்படுகிறது. புதிதாக பணியில் சேர்ந்த ஷேன் சற்று தளர்ந்துவிட பிறகு அடுத்த இரண்டு நாட்களில் ஒரு ஃபினாஸ் நிறுவனத்தில் பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்படுகின்றது. தொடர்ந்து ஒரு சடலமும் மீட்கப்படுகிறது. பணியில் சேர்ந்த உடனே இப்படி ஒரே மாதிரியான முறையில் கொள்ளப்பட்ட மூன்று சடங்கள் மற்றும் கொல்லை சம்பவம் என ஷேன் பணி மிகவும் கடினமானதாகிறது. அனுபவமே இல்லாமல் இருக்கும் அவர் எப்படி இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி… சமந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!