AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலுக்கு மரியாதை டூ நண்பன் – தளபதி விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ

Here is the list of remake films starring Thalapathy Vijay | நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடித்த ரீமேக் படங்களின் பட்டியல் இதோ.

காதலுக்கு மரியாதை டூ நண்பன் – தளபதி விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ
தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 17:20 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகி உள்ளார் தளபதி விஜய் (Actor Thalapathy Vjay). இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக மாறினார். மேலும் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நாயனாக மாறினார் நடிகர் விஜய். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது தனது ரசிகர்கள் அதிர்ச்சியடையும் ஒரு செய்தியை தெரிவித்தார். அதன்படி நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சியை தமிழ் நாட்டில் தொடங்கி இருந்த நிலையில் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்ததை தளபதி விஜயின் ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழக மக்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை வெற்றிப்பெற வைத்து முதலமைச்சராக ஆக்கி உள்ளனர் தமிழக மக்கள். இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… Om Movie: வீரா வீர வா வீரா.. தனுஷின் ஓம் பட தி வைல்ட் தீம் பாடலை வெளியிட்ட சாய் அபயங்கர்!

தளபதி விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ:

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களில் பல மற்ற மொழிகளில் இருந்து ரீ மேக் செய்யப்பட்ட படங்கள் ஆகும். அப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை, ஃப்ரண்ட்ஸ், பத்ரி, யூத், வசீகரா, கில்லி, ஆதி, போக்கிரி, காவலன் மற்றும் நண்பன் ஆகியப் படங்கள் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களில் சில அவ்வபோது ரீ ரிலீஸ் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… ஆர்.ஜே.பாலாஜி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு

Follow Us