AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Om Movie: வீரா வீர வா வீரா.. தனுஷின் ஓம் பட தி வைல்ட் தீம் பாடலை வெளியிட்ட சாய் அபயங்கர்!

OM Movie Theme Music: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக படங்களில் நடித்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் சிறப்பாக உருவாகிவரும் ஆக்ஷன் அதிரடி படம் ஓம். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், இதன் தி வைல்ட் தீம் பாடலை அவர் பகிர்ந்துள்ளார்.

Om Movie: வீரா வீர வா வீரா.. தனுஷின் ஓம் பட தி வைல்ட் தீம் பாடலை வெளியிட்ட சாய் அபயங்கர்!
ஓம் திரைப்படத்தின் தீம் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2026 17:50 PM IST

நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் உருவாகியவரும் திரைப்படம்தான் ஓம் (OM). இப்படமானது ஆரம்பத்தில் தனுஷின் D55 என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இதன் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. D55 என தற்காலிகமாக அழைக்கப்பட்டுவந்த நிலையில், இதற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இதன் டைட்டில் ரிலீஸை விழாவாக படக்குழு நடத்தியிருந்தது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஓம் படத்தின் டைட்டில் டீசரில் வெளியான தீம் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு நிலையில், அதை அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மனதிற்கும் ஓய்வு தேவைப்படுகிறது.. சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த கயாடு லோஹர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட ஓம் படத்தின் தி வைல்ட் தீம் பாடல் குரித்த எக்ஸ் பதிவு:

ஓம் படமானது திருவண்ணாமலை மற்றும் தெலுங்கானா பார்டரில் நடக்கும், செம்மர கடத்தல் பற்றிய கதைக்களமாக உருவாக்கப்பட்டுவருவதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படம் புஷ்பா படத்தை போன்று உருவாக்கப்படுகிறதா? என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு இயக்குநர் ராஜ்குமார் விளக்கம் கொடுத்தார். இப்படம் செம்மர கடத்தல் பற்றி இருந்தாலும், புஷ்பா படத்தை போல இருக்காது என கூறினார்.

இதையும் படிங்க: கார்த்தி உடன் கூட்டு சேரும் நடிகர் கவின் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

ஓம் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருடன் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலேயே இணைந்து நடித்துவருகின்றனர். மேலும் இதில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கருப்பு பட புகழ் இந்திரன்ஸ் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துவருகிறாராம். அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகிவரும் ஓம் படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தேதியில்தான் சிவகார்த்திகேயனின் சேயோன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Follow Us