AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

D55 Movie: அமரன் பட இயக்கத்தில் தனுஷ்.. D55 பட டைட்டில் இதுதான் – வெளியானது கிளிம்ப்ஸ்!

Dhanush D55 Movie Title Revealed: தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில், முக்கியமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்திலும் சிறப்பாக தயாராகிவரும் படம் D55. இன்று (18/06/2026) இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

D55 Movie: அமரன் பட இயக்கத்தில் தனுஷ்.. D55 பட டைட்டில் இதுதான் – வெளியானது கிளிம்ப்ஸ்!
D55 டைட்டில் அறிவிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jun 2026 19:12 PM IST

பான் இந்திய பிரபலம் பெற்ற தமிழ் நாயக்கங்க இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 54 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் 55வது படமாக உருவாகிவருவதுதான் D55. இப்படத்திற்கு தற்காலிகமாக D55 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரங்கூன் மற்றும் அமரன் (Amaran) போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியிருந்த ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கிவரும் நிலையில், தனுஷ் லீட் கதாநாயகனாக நடித்துவருகிறார். அவருடன் இப்படத்தில் மம்முட்டி (Mammooty), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இதில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நிலையில், மம்முட்டி அரசியல்வாதியாக நடித்துவருகிறாராம்.

இந்நிலையில் தற்போது தற்காலிகமாக D55 என இப்படம் அழைக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் என்ன என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு “ஓம்” (OM) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சூர்யா – நஸ்ரியா நடிக்கும் சூர்யா47 பட ஷூட்டிங் எப்போது முடியும்? – தகவல் இதோ!

தனுஷின் D55 படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு:

தனுஷின் இப்படத்திற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படமானது மரம் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருவதாக தெரிகிறது. இதில் தனுஷின் வேடம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக முதல் முறையாக நடித்துவருகிறார். மேலும் மம்முட்டி அதிரடி வில்லனாக இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது வெளியான டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இனி ஜாலி மோட்தான் மச்சி… ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் – டீசர் எப்போது?

தனுஷின் ஓம் பட ரிலீஸ் எப்போது :

ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷனுக்காக கிட்டத்தட்ட ஒன்ற்ரைய ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த நிலையில், கடத்தி தரமாக தயாராகியுள்ளதாம். இதை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு பைசன் பட ஒளிப்பதிவாளர் எழில் பணியாற்ற, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இச்சியில் இப்படத்தில் பலமான பல பாடல்கள் தயாராகியள்ளதாக அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படம் தனுஷின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருக்க, ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us