தரமான சம்பவம் லோடிங்… வைரலாகும் அரசன் படத்தின் அப்டேட்
Arasan Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். தற்போது உள்ள பல நடிகர்களுக்கு இவர் சினிமாவில் சீனியர் என்றே சொல்லலாம். ஏன் என்றால் பிறந்த உடனே இவரது தந்தை டி.ராஜேந்தர் சிலம்பரசனை சினிமாவிற்கு தத்துப் பிள்ளையாக கொடுத்துவிட்டார் என்று ரசிகர்களும் திரையுலகினரும் கூறும் அளவிற்கு அவ்வளவு குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நுழைந்துவிட்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் இவர் சினிமாவில் சிறிது காலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். தொடர்ந்து நடிக்கும் அத்தனை படங்களும் தோல்வி சொந்த வாழ்க்கையில் சிக்கல் என பல பிரச்சனைகளை சந்தித்த நடிகர் சிலம்பரசனுக்கு அவரது ரசிகர்களே உந்துதலாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடை அதிகரிப்பு தொடர் தோல்விகள் என எதுவாக இருந்தாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே ஒரு மாஸான ட்ரான்ஸ்ஃபர்மேஷனை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகர் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல அனைத்தும் அவ்வளவு சிறப்பாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கி வரும் நிலையில் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்:
அரசன் அதிரடி ஆக்ஷன் களத்தில் இறங்கியுள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைப்பயிற்சி இயக்கத்தில், ஒரு சிறப்பான ஆக்ஷன் காட்சியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். சென்னையில் இடைவிடாத இரவு நேரப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட வெற்றிமாறனும் சிலம்பரசனும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வடசென்னையின் பின்னணியில் இப்படம் அமைந்திருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Jana Nayagan: ஜன நாயகன் ரிலீஸாகவில்லை என்றால் என்ன நடக்கும்? படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Arasan – in Action Mode..💥 Peter Hein Master Stunt Choreography..👌 Expecting a Solid Action Block..⭐
Non stop Night Shoot is happening in Chennai..🤝 #Vetrimaaran and #SilambarasanTR are very keen to bring the film out for Diwali..👍 The hype is going to be huge since it’s… pic.twitter.com/d5CnuJvu1S
— Laxmi Kanth (@iammoviebuff007) June 18, 2026
Also Read… கட்டா குஸ்தி 2 படம் யாருக்கானதாக இருக்கும் – நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்