ரைஸ் ஆஃப் லிங்கா… இன்று மாலை வெளியாகிறது மகுடம் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ!
First Single from Magudam Movie Out Today | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மகுடம். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷால். இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான படம் மத கஜ ராஜா. இந்தப் படம் உருவாகி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது. இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த படம் வெற்றி அடையுமா இல்லையா என்ற கேள்வியோடு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்துடன் புதிதாக உருவாகி வெளியான மற்றப் படங்களை பின்னுக்கு தள்ளி இந்தப் படம் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தமிழ் சினிமாவில் கிடப்பில் இருந்த பலப் படக்குழுவினருக்கு அவர்களின் படங்களை தூசி தட்டி திரையரங்குகளில் வெளியிட ஒரு தைரியம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மகுடம்.




இன்று மாலை வெளியாகிறது மகுடம் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ:
இந்த மகுடம் படத்தை முன்னதாக வேறு ஒரு இயக்குநர் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அந்தப் படத்தை விஷாலே இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஷால் அந்தப் படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை மகுடம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ
மகுடம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Rise Starts Here! 👑🔥 #RiseOfLinga – The First Single from #Magudam / #Makutam releases on June 16.
A powerful musical storm by @gvprakash is on its way 🎶⚡
A new Rapper, independent musician introduced by GV, #V7Hhttps://t.co/lsh5KyU7NY#Vishal #DirectorVishal…
— Vishal (@VishalKOfficial) June 15, 2026
Also Read… நடிகராவதற்கு முன்பு.. ரயில் பயணத்தின் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சோனு சூட்!