நடிகராவதற்கு முன்பு.. ரயில் பயணத்தின் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சோனு சூட்!
Sonu Sood talks about train experience | பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சோனு சூட். இவர் சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியானது கள்ளழகர் படம். இந்தப் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் சோனு சூட். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து இந்தி மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் வில்லனாக நடித்தப் படங்களில் ரசிகர்களை மிரட்டி இருப்பார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் இறுதியாக மத கஜ ராஜா படத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அவ்வபோது மக்களுக்கு செய்யும் உதவிகளும் செய்தியாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் சோனு சூட் சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து உள்ளார். அந்த பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் நடிகராகவதற்கு முன்பு தன்னுடைய ரயில் பயணம் எப்படி இருந்தது என்றும் நடிகரான பிறகு தற்போது எப்படி உள்ளது என்பதையும் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.




ரயில் பயணத்தின் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சோனு சூட்:
அதன்படி நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, நாங்கள் தற்போது வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள அபாரமான வளர்ச்சி, அதில் வழங்கப்படும் சேவையின் தரம் மற்றும் உணவு மட்டும் இன்றி அங்கு உள்ள பணியாளர்கள் மற்றும் அவர்கள் காட்டும் அன்பு ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் வியந்து போனேன். இந்த ரயில் பயணம் நான் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் நாக்பூரில் இருந்து முன்பைக்கு பயணம் செய்த எனது ஆரம்பகாலப் பயணத்தை நினைவூட்டியது. அப்போ இருந்த ரயில் சேவைக்கும் தற்போதும் நிறைய வித்யாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சோனு சூட்டுவின் இந்த கருத்திற்கு ஆதரவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் விமர்சனக்களும் எழுந்து வருகின்றது. அதன்படி இந்திய ரயில்வே துறையில் மிகவும் உயரிய வசதிகள் உடைய ரயிலில் பயணம் செய்துவிட்டு ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் ஒரே அளவில் வைத்து பார்க்க முடியாது என்றும் அந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய அனைத்து தரப்பு மக்களாலும் முடியாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… ஜிவி பிரகாஷ் பர்த்டே… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு
இணையத்தில் வைரலாகும் சோனு சூட் வீடியோ:
Thank you, Indian Railways, for upgrading the everyday journey and quality of life of millions of common Indians. 🇮🇳🚆@RailMinIndia pic.twitter.com/w0yTXkO9Ja
— sonu sood (@SonuSood) June 13, 2026
Also Read… காஞ்சனா 4 படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை? வைரலாகும் தகவல்