AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை புகழ்ந்த இயக்குநர் எச்.வினோத்

Director H Vinoth praised Nooru Saami Movie | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் எச். வினோத் புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை புகழ்ந்த இயக்குநர் எச்.வினோத்
நூறு சாமி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 15:46 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து அதிக அளவில் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விஜய் ஆண்டனி கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் கதையில் மிகவும் பலமாக உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைகாரன் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

அதன்படி இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடித்து உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பிரபலங்கள் பலர் பார்த்து தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அதில் இயக்குநர் எச். வினோத் பாராட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை புகழ்ந்த இயக்குநர் எச்.வினோத்:

அதன்படி இயக்குநர் எச். வினோத் அளித்த விமர்சனத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள நூறு சாமி படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் மிக மிக மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இது உள்ளது. மேலும் அனைவரும் நிச்சயமாக திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படம் என்றும் இயக்குநர் எச் வினோத் தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நஸ்லேன் பர்த்டே ஸ்பெஷல்… வாழ்த்து கூறிய சூர்யா 47 படக்குழு

நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Magudam: ஒரே படத்தில் மூன்று ரோலில் விஷால்.. அவரே இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டீசர் இதோ!

Follow Us