AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!

Karuppu Movie is available to stream on OTT starting tonight | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!
கருப்பு படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 12:32 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை 45 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக 45-வது படமாக திரையரங்குகளில் வெளியானது கருப்பு படம். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இதில் சூர்யாவும் த்ரிஷாவும் ஜோடியாக நடிக்கவில்லை. மாறாக நடிகர் சூர்யா இந்தப் படத்தில் கருப்பு சாமி வேடத்தில் நடித்து இருந்தார். படம் ஃபேண்டசி ஆக்‌ஷன் பாணியில் வெளியாகி இருந்தாலும் பல சுவாரஸ்யமான கருத்துகளை நகைச்சுவையாக மக்களிடையே கொண்டு சேர்த்தது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். மார்டர் சாமி படமாக வெளியான இந்த கருப்பு விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்:

இந்த கருப்பு படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற கருப்பு படம் இன்று நள்ளிரவு முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது. இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

Also Read… சிம்பு உடனான கூட்டணியை உறுதி செய்த டியூட் பட இயக்குநர்

அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் 50-வது படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குநர் – வைரலாகும் தகவல்

Follow Us