அஜித் குமாரி 64-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
Ajith Kumars 64th film update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 64-வது படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இவர் அதிக அளவில் தமிழ் மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் பான் இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் முதலாவதாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் மற்றும் இரண்டாவதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அஜித் குமார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தை யார் தயாரிக்க உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




அஜித் குமாரி 64-வது படத்தின் தற்போதைய நிலை என்ன?
‘AK 64’ படத்திற்காக, அஜித் குமாரின் 187 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்கி, அத்திட்டத்தின் மூலம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளச் சில கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். இருப்பினும், தனது சம்பளத்தை துபாயில் உள்ள தனது வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அஜித் அவர்களிடம் கண்டிப்பாகக் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு செய்வதற்குத் தயாரிப்பாளர்களுக்குப் பல நடைமுறைச் சிக்கல்களும் சிரமங்களும் உள்ளன. இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் (அடுத்ததாக), ஏ.எல். விஜய், சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோருடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற அஜித் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நோ ரீ ஷூட்… பேட்ச் ஒர்க் ஒன்லி… வைரலாகும் ஜெயிலர் 2 குறித்த தகவல்
இணையத்தில் வெளியாகும் எக்ஸ் தள பதிவு:
#AK64 – A few corporate production houses and new corporate company producers are willing to pay #AjithKumar his ₹187Cr salary and get themselves launched in the project. However, #AK has strictly instructed them to deposit the salary to his Dubai account. However, there are a… pic.twitter.com/9yETkjKjoz
— Movies Singapore (@MoviesSingapore) June 8, 2026