கருப்பன் வரான் வழி மறக்காதே… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது கருப்பு – ப்ளாக் பஸ்டர் வெற்றியைக் கொண்டாடும் படக்குழு
25 days of Karuppu movie | நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கருப்பு படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் ஃபேண்டசி ஆக்ஷன் பாணியில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லன் வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா, மன்சூர் அலிகான், சுப்ரீத் ரெட்டி, சுப்ரமணியம் நட்டி, அனகா ரவி, ஜார்ஜ் மரியம், கராத்தே கார்த்தி, ஆடுகளம் நரேன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




25 நாட்களை நிறைவு செய்தது கருப்பு படம்:
கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவான இந்தப் படத்தில் நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் நபர்களுக்கு நீதி மறுக்கப்படும் போது கருப்பு சாமியாக உள்ள நடிகர் சூர்யா எப்படி அதனைக் கையாளுகிறார் என்பதே படத்தில் கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் ஸ்டைலிஸான ஒரு சாமிப் படத்தைப் பார்த்ததற்காக மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
25th day of the MEGA BLOCKBUSTER 💥#Karuppu – 25 days of records, celebrations, and unstoppable love from audiences!
The ONE @Suriya_offl‘s massive theatrical success continues its dream run on the big screens.
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar Musical.
A… pic.twitter.com/0FPCERFumC— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 8, 2026
Also Read… Peddi: ராம் சரணின் மாஸ் ஆக்ஷன்.. பெத்தி படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?