சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் ஆர்யா? வைரலாகும் தகவல்
Arya is preparing to step into direction very soon | தமிழ் சினிமாவில் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்த நடிகர் ஆர்யா தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன படத்தில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடித்தப் படத்திலும் இரண்டு நாயகன் கதையிலேயே நடித்தார். பிறகு ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தில் இருந்து தான் தமிழ் சினிமாவில் நாயகன் அந்தஸ்தை பெற்றார் நடிகர் ஆர்யா. அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான கலாபக் காதலன், ஓரம் போ, நான் கடவுள், சர்வம், மதராசப்பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம் என தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியகா தமிழ் சினிமாவில் மிஸ்டர் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது அனந்தன் காடு மற்றும் வேட்டுவம் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து நடிகர் ஆர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் ஆர்யா கடந்த 2014-ம் ஆண்டு முதல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் ஆர்யா.




இயக்குநராக சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் ஆர்யா?
திரைத்துறையில் நிலவும் தகவல்களின்படி, ஆர்யா தற்போது ஒரு திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்; தனது தற்போதைய நடிப்புப் பணிகளை முடித்த பிறகு ஒரு படத்தை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கடந்த காலங்களில் வெற்றிகரமாகத் திரைப்பட இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷால், ஆர்யா மற்றும் ரவி மோகன் போன்ற நடிகர்களும் விரைவில் இயக்குநர்கள் வரிசையில் இணையக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… Ajith Kumar: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Buzz: Actor Arya’s New Avatar 🎬
Reports suggest that #Arya is preparing to step into direction very soon.
According to industry buzz, Arya is currently working on a script and plans to direct a film after completing his existing acting commitments.
Over the years, several… pic.twitter.com/FmuBNe1946
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) June 5, 2026